உருளைக்கிழங்கில் இப்படியொரு ரெசிபியா? குழந்தைங்க விடவே மாட்டாங்க
வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால் இந்த மாதிரி உங்க குழந்தைக்கு சாதம் செய்து கொடுங்க அட்டகாசமாக சாப்பிடுவார்கள்.
பொதுவாகவே குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் அதிகம் பிடிக்கும். இதனை நாம் வித்தியாசமான முறையில் செய்துகொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது உருளைக்கிழங்கு சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றில் எண்ணெய் விட்டு, அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கி, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் துள் இவற்றினை சேர்த்து வதக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு ஒரு நிமிடம் வேகவைத்து விட்டு அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை சாதத்தின் மேலே தூவுங்கள்.
கடைசியாக சிறிது நெய் ஊற்றி நன்றாக கிளறவும். தற்போது அட்டகாசமான சுவையில் உருளைக்கிழங்கு சாதம் தயார். இதற்கு காலிஃப்ளவர் 65, கத்தரிக்காய் வறுவல் வைத்து சாப்பிடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |