குழந்தைகளுக்கு பிடித்த Potato Cheese Balls செய்வது எப்படி?
குழந்தைகள் எப்போதும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அவர்களுக்கு கடைகளில் சிப்ஸ் வாங்கி கொடுப்பதை விட சிப்ஸ் வீட்டில் செய்து கொடுப்பது ஆரோக்கியமாக இருக்கும்.
சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு குழந்தைகளுக்கு பிடித்த Potato Cheese Balls எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 3
- அரிசிமாவு - 2 தேக்கரண்டி
- பிரட் சிரம்ஸ் - 2 தேக்கரண்டி
- மிளகாய் துள் - 1/2 டீ ஸ்பூன்
- மிளகுத்துள் - 1/2 டீ ஸ்பூன்
- மல்லி இலை - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சீஸ் - 12 துண்டுகள்
- சேளமா - 2 தேக்கரண்டி
- மைதா மா - 2 தேக்கரண்டி
- எண்ணெய்- 1லிட்டர்
செய்யும் முறை
உருளைக் கிழங்கை நன்றாக அவித்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு மிளாய் தூள், மிளகு தூள், சோள மாவு, மல்லி இலைகள், உப்பு இவற்றினை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
சிறு சிறு உருண்டையாக பிடித்த பின்பு ஒவ்வொரு உருண்டையின் நடுவே சீஸ் துண்டுகளை வைத்து, பின்பு அரிசி மாவு மற்றும் பிரட் தூளுடன் உருட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |