தினமும் விரும்பி சாப்பிடும் பன்னீரை கடையில் வாங்குறீங்களா? இனி வீட்டில் செய்து பாருங்க
பொதுவாகவே நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நன்றாக இயங்குவதற்கும் உணவு மிகவும் முக்கியமானதாகும். அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி.
ஆனால், ஒரு சிலர் அசைவ உணவை விடுத்து சைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில், சைவ உணவை விரும்பி சாப்பிடும் பன்னீரை கடைகளில் வாங்குவதற்கு பதில் வீட்டிலே செய்யலாம் எப்படித் தெரியுமா,
பன்னீர் செய்யும் முறை
ஒரு பெரிய கிண்ணத்தில், பால் சேர்த்து குறைந்த வெப்பத்தில் பாலை சூடாக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்தவுடன், எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்க்கவும்.
பால் கெட்டியானதும், மோர் போல ஒரு பதம் வந்ததும் ஒரு வெள்ளைத் துணியைப் பயன்படுத்தி வடிகட்டவும்.
தண்ணீர் எல்லாம் வடிந்து மிச்சமாக இருக்கும் பாலை பிடித்த வடிவில் வெட்டி கொள்ளலாம்.
பின்னர் 30-40 நிமிடங்களுக்குப் பிறகு, பன்னீர் கெட்டியான பிறகு உங்களுக்கு பிடித்த ரெசிபியை சமைத்து சாப்பிடலாம்.
குறிப்பு: இவ்வாறு வீட்டில் தயாரிக்கும் பன்னீரை தயாரித்து மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |