மழைக்காலத்தில் சாப்பிட சுவையான வெங்காய போண்டா - 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
மழைக்காலத்தில் சுவையான சூடான உணவுகளை சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். பலரும் பலவிதமான உணவுகளை சாப்பிடுவாரிகள்.
ஆனால், சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் வெங்காய போண்டாவை எப்படி சுவையாக வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்..
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
கோதுமை மாவு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்
முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து அவற்றின் தோல் நீக்கி நீளமாக மற்றும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவை சேர்த்து, அவற்றுடன் சீரகம், மிளகாய்த்தூள், கோதுமை மாவு, உப்பு, வெங்காயம் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.
இதன்பின் சிறிதளவு ஊற்றி தண்ணீர் நன்றாக பிசைந்து தனியாக வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பின் தீயை குறைவாக வைத்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி நன்கு வேகவைத்து எடுக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான வெங்காய போண்டா தயார்!