கிராமத்து ஸ்டைல் கருவாடு தொக்கு இப்படி வைத்து பாருங்க... தெருவே மணக்குமாம்
தெருவே மணமணக்கும் நெத்திலி கருவாடு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் உணவுகளில் கருவாடு முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. கருவாடு மணம் என்பது சமைக்காமலே அனைவருக்கும் பிடிக்கும்.
அதிலும் மண்சட்டியில் வைத்து சமைத்துவிட்டால் தெருவே மணக்கும் அளவிற்கு இருக்கும். அவ்வாறு தெருவே மணக்கும் கருவாடு தொக்கு கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு
புளி
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்
தக்காளி
வெள்ளை பூண்டு
கடுகு
வெந்தயம்
கருவேப்பிலை
உப்பு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
மல்லித்தூள், எண்ணெய்

செய்முறை
நெத்திலி கருவாடின் தலையை நீக்கி சுடுதண்ணீர் 10 நிமிடம் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது அதன் தோல் தனியாக வந்துவிடும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். குறித்த எண்ணெய்யில் கருவாடை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
பொறித்த எண்ணெய்யில் கடுகு, வெந்தயம், பூடு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

சற்று வதங்கியதும், இதில் தக்காளி சேர்த்து வதக்கி, இதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். இத்துடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
10 நிமிடத்திற்கு பின்பு பொறித்து வைத்த கருவாட்டை இதில் சேர்த்து ஒரு 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், அட்டகாசமான சுவையில் கருவாடு தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |