வெறும் 10 நிமிடம் போதும்... மொறுமொறுப்பான மஷ்ரூம் வெங்காய பக்கோடா
மொறுமொறுப்பான மஷ்ரூம் வெங்காய பக்கோடா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
காளான் - 1 கப்
கடலை மாவு - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
அகலமான பாத்திரம் ஒன்றில் நறுக்கிய காளான் மற்றும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவற்றினை சேர்க்கவும்.
பின்பு கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
தற்போது அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
எண்ணெய் சூடானதும் பக்கோடாக்களை போட்டு அவை பாதி வெந்த பிறகு, அவற்றை எடுத்துத் தனியாக வைக்கவும். கடைகளில் கிடைக்கும் பக்கோடாக்களைப் போல உங்கள் பக்கோடாக்களும் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமென்றால், அவற்றை மீண்டும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
இந்த முறையில், மொறுமொறுப்பான காளான் வெங்காய பக்கோடாக்கள் வெறும் 5 நிமிடங்களில் சுவைக்கத் தயாராகிவிடும்.
குறிப்பு: பக்கோடா சுவையாக வர குறைவான மாவும், அதிக காளான் மற்றும் வெங்காயத்தை சேர்த்துக்கொள்வது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |