ஒருமுறை மஷ்ரூம் ஆம்லெட் இப்படி செய்து பாருங்க... அடிபொலியாக சாப்பிடுவாங்க
சத்துக்களை அள்ளித்தரும் மஷ்ரூம் ஆம்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளாக முட்டை மற்றும் காளான் இருக்கும் நிலையில், இதனை வைத்து காலை பொழுதியில் ஆரோக்கியமான காலை உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அந்த வகையில் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த காளான் ஆம்லெட் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 3
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
பால் (விரும்பினால்) - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 ஸ்பூன் (பொடியாக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
முதலில் காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
மற்றொரு பவுல் ஒன்றில் முட்டையை உடைத்து ஊற்றவும். தொடர்ந்து வேக சைத்துள்ள பின்பு முட்டையை உடைத்து வைக்க வேண்டும்.
இதனுடன் வதக்கி வைத்துள்ள காளான், பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லில் இந்த முட்டை கலவையை ஆம்லெட் போடுவது போன்று வட்டமாக போட வேண்டும்.
மிதமான தீயில் வைத்தே இரண்டு பக்கமும் திருப்பி போட வேண்டும். அவ்வளவு தான் சூடான மஷ்ரூம் ஆம்லெட் தயார்.
இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. காளான் மற்றும் முட்டையில் உள்ள அதிகமான புரதச்சத்துகள் தசை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது.
அதுமட்டுமின்றி இரண்டிலும் குறைந்த கலோரிகள் உள்ளதால் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவி செய்கின்றது. வெறும் 15 நிமிடங்களில் காலை உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |