Mushroom Baby Corn Masala: காளான் வாங்கினால் இப்படி ஒருமுறை செய்து பாருங்க
காளான் மற்றும் பேபி கார்ன் இவற்றினை சேர்த்து செய்யும் ரெசிபி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காளான் என்றால் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். ஆம் அசைவத்தை போன்று இதன் சுவை இருப்பதால், அசைவ பிரியர்களும் இதற்கு அடிமையாகவே இருக்கின்றனர்.
தற்போது பேபி கார்ன் உடன் காளான் சேர்த்து செய்யும் ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
image: steffisrecipes
தேவையான பொருட்கள் :
காளான் - 2 பாக்கெட்
பேபி கார்ன் - 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 7 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 4 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
சிசுவான் சாஸ் - 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை :
முதலில் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தொடர்ந்து கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட்டு, இதில் தக்காளி கெட்சப், சோயா சாஸ், சிசுவான் சாஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
மிளகுத்தூள், மஞ்சள் தூள், வினிகர், எலுமிச்சை சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, கடைசியாக காளான் மற்றும் பேபிகான் சேர்த்து கிளறி, ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
இறுதியாக சோளமாவை தண்ணீரில் கலந்து அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மேலே தூவினால் காளான் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |