சத்தான காலை உணவு முருங்கைக்கீரை கோதுமை தோசை.. வெறும் 15 நிமிஷம் போதும்
Morning Breakfast Drumstick Leave Wheat Dosa: காலை நேரத்தில் சத்தான முருங்கைக்கீரை கோதுமை தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான் நாள்முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகின்றது.
அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று எடுத்துக் கொள்ளாமல் புரதச்சத்து நிறைந்த உணவினை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
அவ்வாறு காலை உணவிற்கு சிறந்ததாக முருங்கைக்கீரை கோதுமை தோசை இருக்கின்றது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ள நிலையில், இதனுடன் வேர்கடலை சட்னி செய்து சாப்பிட்டால் புரதச்சத்தும் நமக்கு கிடைக்கின்றது.

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
புளிப்பில்லாத தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
வதக்குவதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
முருங்கைக்கீரை - 3 கப்

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து வதக்குவதற்கு கொடுத்த பொருட்களை நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் கோதுமை மாவு, அரிசி மாவு, தயிர், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்து கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசையாக வார்த்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை கோதுமை தோசை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |