குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி பக்கோடா! 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி?
இன்று சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் காணப்படுகின்றது.
அதிலும் 2 நிமிடங்களில் தயார் செய்யும் மேகி என்றால் அனைவரும் அலாதி பிரியம். ஆனால் இவற்றினை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு கெடுதல் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு மேகி நூடுல்ஸ் கொண்டு பக்கோடா செய்யும் முறையினைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மேகி - 140 கிராம்
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று எடுத்துக் கொள்ளவும்.
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
சில்லி ப்ளாக்ஸ், இஞ்சி பூண்டு விழுது - தலா அரை ஸ்பூன்
மேகி மசாலா மற்றும் வெண்ணெய் - தலா ஒரு ஸ்பூன்
சீஸ் - ஒரு கியூப்
கேரட் - ஒன்று
மைதா மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கேரட் இவற்றினை பொடியாகி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முதலில் 70 கிராம் மேகியை மட்டும் சுடுதண்ணீரில் போட்டு வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள மேகியை நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு வேக வைத்த மேகி, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கேரட், இஞ்சி பூண்டு விழுது, வெண்ணெய், சீஸ், சில்லி ப்ளாக்ஸ், மேகி மசாலா இவற்றினை சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
இதனைத் தொடர்ந்து எண்ணெய் தடவிய ஒன்றில் குறித்த கலவை பரப்பி வைத்து ஃபிரிட்ஜில் அரை மணிநேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து, பின் மைதா மாவு கரைசலிலும், மேகி பொடியிலும் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பாரித்து எடுக்கவும்.
சுவையான குழந்தைகளுக்கு பிடித்த மேகி பக்கோடா தயார்.