KFC ஸ்டைலில் சாஃப்டான சிக்கன் எப்படி செய்யலாம்?
KFC ஸ்டைலில் சிக்கன் செய்வது எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய சூழ்நிலையில் சிக்கன் என்பது அசைவ உணவுப்பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்றாக இருக்கின்றது.
அதிலும் கேஎஃப்சி சிக்கன் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அடிமையாகவே இருக்கின்றனர். தற்போது கேஎஃப்சி ஸ்டைலில் சிக்கன் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
மைதா - 1 கப்
சோள மாவு - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க போதுமானது
மரினேட் செய்ய...
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
உலர் தைம் இலைகள் - 2 டீஸ்பூன்
காய்ந்த ஆர்கனோ - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா பவுடர் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கூடுதல் சுவைக்கு...
சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 1
தயாரிக்கும் முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்த பின்பு, அதனுடன் சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியில் ஊற வைக்கவும்.
பின்பு வெளியே எடுத்து தண்ணீரை வடித்து, அகன்ற தட்டு ஒன்றில் மைதா, சோளமாவு, மசாலாதூள், பேக்கிங் பவுடர் என அனைத்தையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.
தொடர்ந்து பாத்திரம் ஒன்றினை எடுத்து்ககொண்டு அதில் குளிர்ந்த ஐஸ் வாட்டரை எடுத்து, அதனுள் ஒவ்வொரு துண்டு சிக்கனையும் போட்டு 7 நொடிகள் கழித்து எடுத்து, குறித்த மாவு கலவையில் பிரட்டி எடுத்து தட்டு ஒன்றில் வைக்கவும்.
பிறகு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை போட்டு 7 நிமிடம் பொரித்து எடுத்தால் கேஎஃப்சி சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |