கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்... வெறும் 10 நிமிடம் போதும்
அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
1/2 கிலோ சிக்கன்
3 நறுக்கிய - பெரிய வெங்காயம்
1 ஸ்பூன் - இஞ்சி-பூண்டு விழுது
4 - பச்சை மிளகாய்
1 ஸ்பூன் - மல்லித் தூள்
1 ஸ்பூன் - கரம் மசாலா
அரை ஸ்பூன் - மஞ்சள் தூள்
1 ஸ்பூன் - சிக்கன் மசாலா
1 - நறுக்கிய தக்காளி
2 கப் - தேங்காய் பால்
1 ஸ்பூன் - கடுகு
5 - சின்ன வெங்காயம்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
1 கொத்து - கறிவேப்பிலை

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மேரினேட் செய்வதற்கு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மல்லித்தூள், கரம் மசாலா, மஞசள் தூள், சிக்கன் மசாலா, கறிவேப்பிலை மற்றும் உப்பு இவையனைத்தையும் பாதியளவு சேர்த்து நன்றாக பிசைந்து ஊற வைக்கவும்.
10 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு, அகலமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து மேரினேட் செய்த சிக்கனை சேர்க்க வேணடும். பின்பு கெட்டியான தேங்காய்பாலை சேர்த்து சிக்கன் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, நறுக்கிய வெங்காயம் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மீதமுள்ள மசாலா பொடிகளை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, பின்பு தக்காளியை சேர்க்கவும். இதனுடன் சிக்கனை சேர்த்து கலந்து, மீதமுள்ள கெட்டியான தேங்காய்பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |