வீட்டில் கறிவேப்பிலை இருந்தா இந்த மாதிரி தொக்கு செய்ங்க - ரெசிபி இதோ
தினமும் கருவேப்பிலை சாப்பிட வேண்டும். அதேசமயம் கருவேப்பிலையை சாப்பிட எந்த சிரமமும் இருக்கக்கூடாது. அந்த கருவேப்பிலை ரெசிபி நாவிற்கு ருசியாகவும் இருக்க வேண்டும்.
முடி அதிகமாக ருசியாகவும் வேண்டும். இப்படி உங்களுக்கு எந்த தேவை இருந்தாலும் சரி இந்த கருவேப்பிலையை தொக்கு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
கறிவேப்பிலை எண்ணற்ற நன்மைகளை கொண்டது. ஆனால் அதை பெரும்பாலும் சாப்பிடும்போது தேவையற்ற பொருளாக ஒதுக்கி வைத்து விடுவோம்.
இதனால் அதன் நன்மைகளை பெற முடியாமலே போகும். எனவே இந்த கறிவேப்பிலை தொக்கு இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். இப்படி தொக்கு வைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள்.அதன் நன்மைகளும் முழுமையாக கிடைக்கும்.

தேவையான பொருட்கள்
- 1 கப் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 10 வர மிளகாய்
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- அரை ஸ்பூன் வெல்லம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் கப் புதினா
- கால் கப் கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 10 வர மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் புளிச்சாறு, ½ டீஸ்பூன் வெல்லம், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய்ஊற்றி சூடாக்கி, அதில் பெருங்காயம், வர மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், புளி சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயின் சூட்டிலேயே வதக்கவும். வறுத்த பொருட்களை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
உப்பு, வெல்லம் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பான துவையலாக அரைக்கவும். அரைக்கும்போது தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் மேலும் சேர்க்கலாம்.
பின்னர் இதை கிண்ணத்திற்கு மாற்றவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3-4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும் இது அருமையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |