கார்த்திகை தீபம் ஸ்பெஷலான இனிப்பு.... 15 நிமிடத்தில் சுவையான நெய் அப்பம்
Special Ghee Appam: கார்த்திகை தீபம் அன்றும் செய்யப்படும் ஸ்பெஷல் நெய் அப்பம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.
கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் இம்மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. வீடு முழுவதும் அகல்விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது.
மேலும் முருகப்பெருமானுக்கும், சிவபெருமானுக்கு பிடித்தமான இனிப்புகளை படையலாக வைத்து வழிபடுவார்கள். அவ்வாறான இனிப்புகளில் ஒன்று தான் நெய் அப்பம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பான நெய் அப்பத்தினை வெறும் 15 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - சிறிது
ரவை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
நறுக்கிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
நெய் அப்பம் செய்வதற்கு முதலில் பாத்திரம் ஒன்றில் பொடித்த வெல்லத்தை எடுத்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கரைய வைக்கவும்.
பின்பு அதனை வடிகட்டி பாத்திரம் ஒன்றில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் ரவை மற்றும் கோதுமை மாவை எடுத்து, அதில் வடிகட்டி வைத்திருக்கும் வெல்ல தண்ணீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து 20 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்கவும்.

ஊற வைத்த ரவை கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை பாத்திரம் ஒன்றில் எடுத்து வைத்த பின்பு, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
சூடான நெய்யில் நறுக்கிய தேங்காய், எள்ளு இவற்றினை வறுத்து மாவுடன் கலந்து கொள்ளவும். இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில ்வைத்து, சூடானதும், குழிகளில் சிறிதளவு நெய் சேர்த்து குழியில் மாவு கலவை ஊற்றி குறைவான தீயில் முன்னும், பின்னும் வேக வைத்து பொன்னிறமான பக்குவத்தில் எடுத்தால் சுவையான நெய் அப்பம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |