Kara Egg Dosa: ஹோட்டல் ருசியை மிஞசும் கார முட்டை தோசை
தோசை பிரியர்களுக்கு பிடித்தமான கார முட்டை தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சட்னி செய்ய
காய்ந்த மிளகாய் - 20
பூண்டு - 12 பற்கள்
சின்ன வெங்காயம் - 15
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
புளி
மிளகாய் ஊறவைத்த தண்ணீர்
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம்
கார முட்டை தோசை செய்ய
தோசை மாவு
நெய்
தாளித்த கார சட்னி
முட்டை
உப்பு
மிளகு தூள்
வெங்காயம் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
நெய்
செய்முறை
கார சட்னி செய்வதற்கு மிக்ஸியில் ஊற வைத்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கல்லுப்பு, புளி, மிளகாய் ஊற வைத்த தண்ணீர் இவற்றினை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு தாளிப்பதற்கு கடாய் ஒன்றில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சீரகம் தாளித்து அரைத்து வைத்திருக்கும் சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசை ஊற்றிய பின்பு, சுற்றி சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் கார சட்னியினை தோசை மீது வைத்து நன்கு பரப்பவும்.
முட்டையை பாத்திரம் ஒன்றில் ஊற்றி உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கி, தோசை மீது ஊற்றவும். பின்பு அதன் மீது வெங்காயம், மல்லி இலை இவற்றினை தூவி, சிறிது நெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைக்கவும்.
அவ்வளவு தான் சுவையான கார முட்டை தோசை தயார். தோசை பிரியர்களுக்கு இந்த தோசையை விடாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |