இந்த பண்டிகையில், 15 நிமிடத்தில் சுவையான இன்ஸ்டன்ட் ஜிலேபி செய்ய வேண்டுமா?
இந்த தீபாவளிக்கு சுவையான பல இனிப்பு பல காரங்களை வீட்டிலே நாம் செய்வது உண்டு. அந்த வகையில், பலருக்கும் பிடித்த இனிப்பான ஜிலேபியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் சர்க்கரை
1 கப் மாவு
ஏலக்காய்
4 ஸ்பூன் மைதா மாவு
2 ஸ்பூன் தயிர்
1 ஸ்பூன் நெய்
பேகிங் பவுடர் பைபிங் பேக் அல்லது மில்க் பேக்கட்
செய்முறை விளக்கம்
முதலில் 2 கப் அளவு சர்க்கரையும், 1 கப் அளவு தண்ணீரும் சேர்த்துகொள்ள வேண்டும். அதன் பின்னர், ஜிலேபியை ஆரஞ்சு நிறத்தில் கொண்டு வர, ஆரஞ்ச்-ரெட் கலர் மிகஸ் செய்யப்படுகிறது.
பின்னர், சிறிது அளவு ஏலக்காய் சேர்த்துவிட்டு, சர்க்கரை கரையும் அளவிற்கு நன்கு கலக்கிவிட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்தால் போதும், சரக்கரை பாகு ரெடியாகிவிடும்.
இதனிடையே, ஜிலேபிக்கு தேவையான மாவை ரெடி செய்ய வேண்டும். அதற்கு ஒரு பவுல் எடுத்துவிட்டு, 4 ஸ்பூன் மைதா மாவு சேர்க்க வேண்டும்.
அதனுடன், இரண்டு ஸ்பூன் தயிரும், 1 ஸ்பூன் அளவிற்கு நெய்யும் சேர்க்க வேண்டும். அடுத்ததாக, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிட்டு, நன்கு கலக்க வேண்டும்.
மேலும், ஜிலேபி மொறு மொறுனு வருவதற்காக, சிறிது அளவு ஈனோ அல்லது பேகிங் பவுடர் சேர்த்தால் போதும் மாவு ரெடி. மில்க் பெக்கேட் நன்கு கழுவிவிட்டு, அதில் தயார் செய்த மாவை நிரப்ப வேண்டும்.
அதன் நுனியை தான், கட் செய்து ஜிலேபி ஊற்ற உபயோகிக்கப்போறோம். தனி பெனில் எண்ணெய் ஊற்றி, மில்க் பெக்கேட் நுனியில் சிறிாக கட் செய்து, ஜிலேபி வடிவத்தை மாவை மூன்று முறை சுற்றிஎடுக்க வேண்டும்.
இப்போது, எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அதிகளவில் சூடு இருந்தால், ஜிலேபி கருகும் அபாயம் உள்ளது. ஜிலேபி நன்கு தயாரான பிறகு, அதனை எடுத்து, சர்க்கரை பாகுவில் ஊறவைக்க வேண்டும்.
சிறிது நேரம் ஊறுனதும், அதனை வெளியே எடுத்திடலாம். அவ்வளவு தான் சுவையான சுவையான ஜிலேபி ரெடி. இந்த செயல்முறையில் தேவையான ஜிலேபிகளை உடனடியாக தயார் செய்துவிட முடியும்.