அரிசி, உளுந்து இல்லாமல் தோசை ஊற்றலாம்... இந்தப் பொருள் மட்டும் இருந்தால் போதும்
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். அவ்வாறு வீடிகளில் தோசை செய்யும் போது மாவோ அல்லது உளுந்தோ இல்லை என்றால் கவலை இல்லாமல் தோசை ஊற்றலாம்.
எப்படி மாவும் உளுந்தும் இல்லையென்றால் செய்வது என்பது எல்லோருக்கும் ஒரு கேள்வியாகத் தான் இருக்கும் அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ரவை
- தண்ணீர்
- அவல்
- தயிர்
- உப்பு
- பேக்கிங் சோடா
செய்முறை
முதலில் ஒரு கப் ரவையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கப் அளவு வெள்ளை அவலை எடுத்து கழுவி ஊற வைக்க வேண்டும்.
இவை இரண்டும் ஊறிய பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 3 கரண்டி தயிர் சேர்த்து பதமாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து சிறிது நேரம் கழித்து தோசை ஊற்றினால் சுவையான தோசை தயாராகி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |