வீட்டில் தோசை மாவு இல்லையா? 10 நிமிடத்தில் உடனடி தோசை மாவு ரெடி ...இதோ சூப்பர் ஐடியா?
10 நிமிடத்தில் தோசை மாவு தயார் செய்து விடலாம்.
எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
நாம் தயாரிக்க போகும் உடனடி தோசை மாவு கலவையை வைத்து க்ரிஸ்பியாக தோசை சுட்டு சாப்பிடலம்.

தேவையான பொருட்கள்
- ரவை
- கோதுமை மாவு
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- அரிசி மாவு
- உப்பு
- எண்ணெய்
- சீரகம்
- வெங்காயம்
- மிளகு தூள்
செய்முறை
முதலில் தக்காளி, காய்ந்த மிளகாய் 1 கப் ரவை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த கலவையை பாத்திரல் மாற்றி அதில், 1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலவையை தோசைமாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக இந்த மாவை பக்குவமாய் தோசை போல் சுட்டு எடுத்து சட்னியுடன் பரிமாறினால் சூப்பரான தோசை தயார்.
இதை ரவா தோசை, தக்காளி தோசை அரிசி தோசை என விருப்பத்திற்கு ஏற்றார் போல் அழைக்கலாம்.
