15 நாட்களில் முடி வளர வைக்கும் ஆயில்.. யாரெல்லாம் போடலாம் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி பிரச்சினை பெறும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
மேலும் தலைமுடியில் இருக்கும் அடர்த்தி நாளுக்கு நாள் சிலருக்கு குறைந்து கொண்டே வரும்.
இதற்கு முக்கிய காரணம் தலைமுடி உதிர்வு தான். இந்த பிரச்சினை ஆரோக்கியம் குறைபாடு, உடலில் ஏதாவது நோய், மருந்து பாவணை உள்ளிட்ட காரணங்களினால் ஏற்படுகின்றது.
இதற்கு வெளியில் மருந்து தேடாமல் வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து சரிச் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் தலைமுடி பிரச்சினையை கட்டுபடுத்தி, நீளமாக தலைமுடியை வளர வைக்கு ஆயில் எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- செம்பருத்திப் பூ
- வெந்தயம்
செய்முறை
முதலில் ஒரு அளவான பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தினுள் வெந்தயம் மற்றும் ஐந்து இதழ்கள் செம்பருத்திப் பூவை போடவும்.
கலந்து கொண்டு பாத்திரத்தை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்.
எண்ணெய் நிறம் மாறி, வாசனை வந்ததும், அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் அவற்றை ஒரு கண்ணாடி குடுவையில் மாற்றவும்.
பாவனை
இந்த எண்ணெய் வாரத்திற்கு இரண்டு தடவைகள் தலைக்கு வைத்து குளிக்கவும்.
இரண்டு வாரங்களில் நிச்சயம் பலன் கிடைக்கும்.
முக்கிய குறிப்பு
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |