வீட்டில் முட்டை இருக்கா? அப்போ இந்த ரெசிபி செய்ங்க 1 மாதம் வரை கெடாது
பொதுவாக வீட்டில் உணவு செய்தால் அது இரண்டு நாட்கள் மேல் வைத்திருக்க முடியாது. வீட்டில் பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவதற்காக ஊறுகாய் செய்வார்கள்.
இதில் சிக்கன், மட்டன், மீன் சேமிப்பு ஊறுகாய் செய்வதை பார்த்திருப்போம். அந்த வகையில் முட்டை நமது ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
இதில் பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் ஈ போன்றவை நிறைந்துள்ளன. மேலும் இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது.
ஊறுகாய் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த ஊறுகாயை முட்டையை வைத்து எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை - ஏழு
- மிளகு தூள் - ஒரு ஸ்பூன்
- உப்பு - சுவைக்க
- தண்ணீர் - போதுமானது
- எண்ணெய் - ஒரு கப்
- இஞ்சி பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்
- வெந்தயப் பொடி - கால் ஸ்பூன்
- கடுகு பொடி - இரண்டு ஸ்பூன்
- கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்
- மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
- மிளகாய் - மூன்று கரண்டி
- கறிவேப்பிலை - குப்பேடு
- எலுமிச்சை சாறு - அரை கப்
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். இன்னுமொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து மிளகு தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதன் பின்னர் அந்த தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் போட்டு அதன் மேல் கலக்கி வைத்த முட்டையை மூடியை வைத்து கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும்.
முட்டை நன்றாக கெட்டியாகி வெந்தவுடன் கெட்டியான முட்டை கலவையை விரும்பிய அளவு துண்டுகளாக வெட்டி தனியே எடுத்து வைக்கவும். இப்போது பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெந்தயம், கடுகு தூள், கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
இப்போது அடுப்பில் இன்னுமொரு பாத்திரத்தை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். முட்டைத் துண்டுகளை எண்ணெயில் போட்டு சிறிது தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.
அவை நிறம் மாறும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் முன்பே தயாரிக்கப்பட்ட மிளகாய் கலவையில் வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இறக்கி ஆறிய பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இந்த முட்டை சேமிப்பு சட்னியை வைக்கவும்.இத ஊறுகாய் வகையிலேயெ மிகவும் சுவையாக இருக்கும்.
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு இந்த முட்டை ஊறுகாய் மிகவும் பிடிக்கும்.இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். வீட்டியேலயே செய்ததால் ஒரு மாதம் வரை கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |