அரைச்சு வச்ச இறால் மசாலா - ஒருமுறை இப்படி செய்ங்க
இறால் மசாலா வித்தியாசமாகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இறால் மசாலா
கடல் உணவு என்று சொன்னாலே அதில் இறாலை யாரும் விரும்பாமல் இருக்க மாட்டார்கள். இது விலையும் அதிகமாக விற்கப்படும் ஒரு கடலுணவாகும்.
ஆனால் இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கும்.
இறால் வைத்து குழம்பு, வறுவல், கிரேவி, ரோஸ்ட், இறால் 65, என பல வகைகளில் செய்யலாம். ஆனால் அதை வைத்து எப்படி மசாலா கிரே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- இறால் - 500 கிராம்
- பெரிய வெங்காயம் - 2
- தேங்காய் துண்டுகள் - 50 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- காஷ்மீரி மிளகாய் - 8
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1.5 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 4 கொத்து
- உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை
இந்த ரெசிபி செய்ய இறாலை சுத்தம் செய்து வைக்கவும். காஷ்மீரி மிளகாய், சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய், புளி கரைசல் சேர்த்து அரைத்து மசாலா பேஸ்ட் தயாரிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

மஞ்சள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, புளி கரைசல் சேர்த்து கலந்து வேக விடவும்.
இறாலை சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்கள் சமைத்து தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் இறால் மசாலா ரெடி.