Easy Coffee Premix: காபி இல்லாமல் வாழ முடியாத ஆளா நீங்க?
காபி பிரியர்களை குஷியாக்கும் வகையில் உடன் காபி பொடி தயாரிக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில், வைராலாகி வருகின்றது.
பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ஆனால் சிலருக்கு காபி குடிக்காம நாளே விடியாது என்றால் மிகையாகாது.
இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபியின் மணம், சுவை என்பவற்றையும் தாண்டி காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான்.
அப்படி காபியில் என்னதான் இருக்கு?
காபி குடித்தவுடன் மனதிலும் உடலிலும் உடனடியாக ஏற்படும் புத்துணர்வுக்கு முக்கிய காரணம்,காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான்.
இது இரத்தத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்களின் அளவை வெகுவாக அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.
காபியில் அடங்கியுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நரம்பியல் சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாகவும் அமெரிக்க ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எந்தவிதமான உடல் பிரச்சினைகளும் இல்லாதவர்களாக இருந்தால் நாளொன்றுக்கு 2 தொடக்கம் 3 காபிகளை குடிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அப்படி காபி பிரியர்கள் எங்கு சென்றாலும் நொடியில் வீட்டில் தயாரிக்கும் அதே சுவையில் காபி குடிக்க வேண்டுமா? அப்போ இந்த உடன் காபி பொடியை தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |