நீங்கள் அறியாத பலன்களுடன் ஒரு டிராகன் ஃப்ரூட் ஜூஸ் குடிக்கலாமா?
பொதுவாக நாம் தினமும் உணவிற்காக ஒரு சில பழங்களை மட்டும் தான் எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக வாழைப்பழம், மாம்பழம் , பப்பாளிப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் என்பற்றைக் கூறலாம்.
டிராகன் பழம்
அந்த வகையில் சிலர் டிராகன் பழத்தை பற்றி தெரிந்திருக்கமாட்டார்கள். மேலும் இந்த பழம் சந்தையில் கிடைப்பதும் மிக அரிதான விடயமாகும். ஆனால் இந்த பழத்தில் அதிகமாக வைட்டமின் பி 3 இருக்கிறது.
இந்த பழத்தை உட்கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்கபட்டு பருமன் இல்லாத சீரான உடலமைப்பை பெறலாம். மேலும் டிராகன் பழத்திலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலிமைப் பெற செய்கிறது.
இந்த பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். ஏனெனில் பார்வைத் திறன், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்த வகையில் இதனை பழமாக சாப்பிட முடியாதவர்களுக்கு பானமாக தயாரித்து கொடுக்கலாம். அது எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- டிராகன் பழம் – 2
- தேன் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- ஐஸ் கட்டி – தேவையான அளவு
- குளிர்ந்த நீர் – தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் டிராகன் பழங்களை இரண்டாக பிழந்துக் கொள்ள வேண்டும். வெட்டிய பின், அதிலுள்ளே இருக்கும் தசைப்பகுதியை மாத்திரம் சிறிதளவு எடுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து வெட்டியெடுத்த பழங்களில் மீதிப்பழங்களை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் நறுக்கிய மீதியுள்ள டிராகன் பழங்களை போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், குளிர்ந்த நீர் ஊற்றி மீண்டும் போட்டு இன்னொரு தடவை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை ஒரு ஒரு டம்ளரிலோ அல்லது பவுலிலோ ஊற்றி, அதனுடன் டிராகன் பழ துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளை போட்டு பரிமாறலாம். தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த டிராகன் ஃப்ரூட் ஜூஸ் தயார்!