சிக்கன் பிரியாணிக்குச் சவால் விடும் காளான் பிரியாணி... செய்வது எப்படி?
சிக்கன் பிரியாணிக்கு சவால் விடும் அளவிற்கு காளான் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பிரியாணி என்பது அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். பிரியாணிக்கு செய்வதற்கு முக்கியமானது அதில் சேர்க்கப்படும் தனித்துவமான மசாலா கலவை தான்.
இங்கு அசைவ பிரியாணிக்கு சவால் விடும் அளவிற்கு காளான் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
காளான்
பச்சை மிளகாய்
தக்காளி
வெங்காயம்
மிளகாய்த் தூள்
மசாலா தூள்
அரிசி
செய்முறை
முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் மசாலா போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்க வேண்டும். இதனுடன் வதக்கிய காளனையும் அரிசியை சேர்க்கவும்.
பின்பு தேவையான தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். உப்பு காரம் சரியாக இருப்பதை பார்த்து மூடி வைக்கவும்.
அரிசி வெந்ததும், நறுமணமோடு காளான் பிரியாணி தயார். சிறிது நெய் தெளித்துப் பரிமாறலாம். புதினா ராயிதாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |