பாலாடையில் பாயசமா? 5 நிமிடத்தில் ஈஸியா தயார் செய்யலாம்
பொதுவாக அதிகமான ஊட்டச்சத்து அதிகம் கொண்ட முக்கிய உணவாக பால் இருக்கின்றது. பால் மட்டுமின்றி பாலில் இருந்து நாம் பெறும் அனைத்து பொருட்களும் சத்துக்களைக் கொண்டதே.
தற்போது பாலாடையில் பாயாசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
100 கிராம் அரிசி
1 லிட்டர் முழு கிரீம் பால்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
சர்க்கரை
பால்
1 தேக்கரண்டி நெய்
முந்திரி, திராட்சை - தேவைப்பட்டால்
செய்முறை
பலடா பிரதமன் கேரளாவின் பாரம்பரிய சமையல் வகைகளில் ஒன்றாகும், கேரளாவில் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகளில் இந்த இனிப்பை செய்கின்றனர்.
100 கிராம் அரிசியை எடுத்து நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு குறித்த அரிசியை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தொடர்ந்து கடாய் ஒன்றில் 1 லிட்டர் முழு கிரீம் பால் சேர்த்து கொதிக்க விடவும், ஒரு லிற்றர் பால் முக்கால் லிற்றராக வரும் வரை நன்கு காய்ச்சி, அதனுடன் 1 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பின்பு இதனுடன் வேக வைத்த அரிசியை சேர்த்து, பாயாசம் கெட்டியாக வரும் பொழுது இதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
பின்பு அதனுடன் நெய் சேர்க்கவும். முந்திரி, திராட்சை இவற்றினை சேர்த்து பின்பு இறக்கவும். தற்போது அப்பளம் மற்றும் பழம் சேர்த்து சாப்பிடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |