பனை மரம் போல முடி வளர வேண்டுமா? கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்க
பொதுவாகவே பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் என்பது மிகவும் விருப்பமானதொன்று தான். ஆனால் அந்தக்காலத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் தரையை தட்டும் அளவிற்கு முடி வளர்ந்திருக்கும்.
அவர்கள் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு, நரைமுடி பிரச்சினை, பொடுகு பிரச்சினை போன்றவை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு கறிவேப்பிலையை எண்ணெய்யை கொண்டு சிறந்த தீர்வைப் பெறலாம்.
கறிவேப்பிலை எண்ணெய் செய்யும் முறை
கறிவேப்பிலை எண்ணெய் செய்யும் முறை வீட்டிலே கறிவேப்பிலை எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் ஒரு கடாயில் ஒரு கப் தேங்காய் எண்ணெய்யில் ஒரு கை பிடி புதிய கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 15-20 நிமிடத்திற்கு எண்ணெய்யை நன்றாக கொதிக்க வைத்து ஆறவைக்க வேண்டும். ஆறிய பின்னர் கறிவேப்பிலையை அப்புறப்படுத்தி எண்ணெய்யை தனியாக எடுத்து பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்து 1 மணி நேரத்திற்குப் பிறகு ஷாம்பு போட்டு நன்றாக அலச வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினால் உங்களுக்கு நீளமாகவும் அடத்தியாகவும் முடி வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |