நண்டு வாங்கினால் ஒருமுறை இப்படி வறுவல் செய்து பாருங்க! சுவை தாறுமாறாக இருக்கும்
அசைவ பிரியர்கள் அதிகமாக தெரிவு செய்யும் நண்டை வித்தியாசமான முறையில் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
நண்டு - 3/4 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு பொடியாக நறுக்கிய பெரிய மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தொடர்ந்து கழுவி வைத்திருக்கும் நண்டை உள்ளே போட்டு நன்றாக கிளறிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து, மூடியைத் திறந்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான நண்டு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |