காரசாரமான வெங்காய சிக்கன் கிரேவி... வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம்?
காரசாரமான வெங்காய சிக்கன் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முதலில் இருப்பது சிக்கன் தான். அதிலும் ஆந்திர ஸ்டைலில் காரசாரமாக சிக்கன் செய்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்.
சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவை அதிகமாகவே இருக்கும். இங்கு காரசாரமான வெங்காய சிக்கன் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
spice eats
தேவையான பொருட்கள்
கோழி - 500 கிராம்
வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5 முதல் 6
தயிர் - 1 கப்
மிளகாய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
தயாரிக்கும் முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு தக்காளித் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை போட்டு சிறிது வதக்கவும். 10 நிமிடங்கள் கழித்து சிக்கனை அடுப்பில் உள்ள மசாலா கலவை பாத்திரத்தில் சேர்க்கவும்.
மசாலா நன்றாக சிக்கன் மீது இருக்குமாறு பிரட்டி எடுக்கவும். பின் தயிர் மற்றும் மிளகாய் சேர்த்து கலக்கிவிடவும். நன்றாக வதங்கி மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். தற்போது சுவையான காரசாரமான ஆனியன் சிக்கன் கிரேவி தயார்.
புரதச்சத்து அதிகமாக உள்ள சிக்கனை இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |