சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா? அசைவ பிரியர்களே உங்களுக்குத்தான்
அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது.
இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2-3
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
எலும்புள்ள சிக்கன் - 150 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
புளி கரைசலுடன் தக்காளியை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி, வரமிளகாய், கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்த சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு எலும்புள்ள சிக்கனை கழுவி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதனுடன் புளி கரைசலை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். சிக்கன் வெந்த பின்பு கடைசியாக மல்லி இலையை தூவி இறக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |