வீட்டுல சிக்கன், உருளைக்கிழங்கு இருக்குதா? ஹோட்டல் ஸ்டைல் குருமா செய்யலாம்
சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த வகையில் உருளைக்கிழங்கு சிக்கன் வைத்து சுவையான குருமா எவ்வாறு செய்யவது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்கள் உணவில் சிக்கன் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றது. வீட்டில் சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால் சுவையான குருமா தயார் செய்யலாம்.
இந்த குருமா சப்பாத்தி, பூரி, புரோட்டா, பிரியாணி இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். ரெஸ்டாரெண்ட் சுவையில் இருக்கும் இந்த குருமாவை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மசாலா 1
1 ஸ்பூன் நல்லெண்ணெய்
2 பல் பூண்டு
1 இன்ச் நறுக்கிய இஞ்சி
6 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் மல்லி விதை
1 ஸ்பூன் மிளகு
3/4 கப் நறுக்கிய வெங்காயம்
3 நறுக்கிய தக்காளி
3/4 கப் தண்ணீர்
மசாலா 2
1 ஸ்பூன் நல்லெண்ணெய்
1/2 ஸ்பூன் சோம்பு
3 கிராம்பு
2 ஏலக்காய்
2 இன்ச் பட்டைத் துண்டு
1 ஸ்பூன் கசகசா
1/2 கப் துருவிய புதிய தேங்காய்
அரை மணி நேரம் ஊறவைத்த 20 பாதாம் பருப்புகள்
3/4 கப் தண்ணீர்

குருமா செய்ய தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் - நல்லெண்ணெய்
1/2 கப் நறுக்கிய வெங்காயம்
1 கொத்து கறிவேப்பிலை
அரை கிலோ சிக்கன்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
2 கப் தண்ணீர்
3 நறுக்கிய உருளைக்கிழங்கு
1 எலுமிச்சை சாறு
3 கொத்து நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சிறிதளது எண்ணெய் சேர்த்து மசாலா 1ல் கொடுத்த பொருட்களை சேர்த்து வறுத்து தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே போன்று கடாயில் எண்ணெய் சேர்த்து மசாலா 2ல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி, மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும்.
பின்பு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடம் வதக்கி, நறுக்கிய சிக்கனையும் சேர்க்கவும்.

ரெசிபிக்கு சிக்கன் தொடை பகுதியை எடுத்துக் கொள்ளவும். பின்பு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். முதல் மசாலாவை சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்.
பின்பு தோல் நீக்கிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து நன்றாக கலந்து, இரண்டாவது மசாலாவையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் மல்லித்தழை இவற்றினை சேர்த்து இறக்கினால் குருமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |