இது புதுசா இருக்கே... சிக்கன் வச்சி ஆம்லெட்டா ? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவது பிடிக்கும்.
ஆரோக்கிய நன்மைகளை அதிகரிப்பதற்காக சிலர் முட்டையுடன் கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட சில காய்கறிகளையும் துருவி சேர்ப்பார்கள்.
ஆனால் முட்டை ஆம்லெட்டில் சிக்கன் சேர்த்து எப்போதாவது சாப்பிட்டு பார்திருக்கின்றீர்களா? அசத்தல் சுலையில் சிக்கன் ஆம்லெட் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
முட்டை - 4
சமைத்த சிக்கன் - கால் கப்(சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 தே.கரண்டி
மிளகுத்தூள் - 2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை ஆகியவற்றை முடிந்தளவுக்கு பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சமைத்த சிக்கனையும் பொடிப்பொடியாக நறுக்கிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலையை ஆகியவற்றை சேர்த்து நன்றான கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய சிக்கனையும் அதனுடன் சேர்த்து பின்னர் முட்டைகளை உடைத்து இந்த கலவையில் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு மிளகுத்தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காயவிட்டு, இந்த கலவையை ஊற்றி நன்கு வேகும்வரை காத்திருந்து பின்னர் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் புரதம் நிறைந்த சூப்பரான சிக்கன் ஆம்லேட் தயார்.
எடையை குறைக்க வேண்டும் என பேராடுபவர்களுக்கு இந்த சிக்கன் ஆம்லேட் சிறந்த காலை உணவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |