செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி கிரேவி... மணக்க மணக்க எப்படி செய்றது?
Chettinad Nattukozhi Gravy: அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் நாட்டுக்கோழி. இதனை குழம்பு, கிரேவி, 65 என செய்து சாப்பிடுகின்றோம்.
ஆனால் சற்று வித்தியாசமாக செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி கிரேவி செய்யலாம். காரசாரமாக அட்டகாசமான சுவையில் நாட்டுக்கோழி கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு...
மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10

தேங்காய் விழுதிற்கு
முந்திரி - 2
துருவிய தேங்காய் - 1/3 கப்
கசகசா - 1 டீஸ்பூன்
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைத்த மசாலா
நாட்டுக்கோழி - 1 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 2 கப்
தேங்காய் விழுது
செட்டிநாடு மசாலா - 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்பு. வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் இவற்றினை சேர்த்து நன்றாக கலந்துவிடடவும்.
இதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து, நாட்டுக்கோழியையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் வைத்து இறக்கவும்.
விசில் அடங்கியதும், குக்கரை திறந்து தேங்காய் விழுது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து, கடைசியாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து மல்லிஇலை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |