அட்டகாசமான சுவையில் காலிஃபிளவர் ரைஸ்... வெறும் 10 நிமிடத்தில் தயார்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் ரைஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவுகள் என்றால் சாப்பிடுவதற்கு அதிகமாகவே முகம் சுழிப்பது உண்டு. அந்த வகையில் காலிஃபிளவர் ரைஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சாதம் - 2 கப்
காலிஃபிளவர் - 1
வேக வைத்த பட்டாணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து பொடி செய்ய
கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கசகசா - 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 7
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வறுப்பதற்கு கொடுத்த பொருட்களை நன்றாக வறுத்து பின்பு பொடியாக்கிக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்று வதக்கிய பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கிய பின்பு, நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு மூடிவைக்கவும்.
வறுத்து பொடி செய்துள்ள மசாலாவை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு உதிரியாக வைத்த சாதத்தினை போட்டு கிளறி, அதனுடன் உப்பு நெய் சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும்.
சுவையான காலிஃபிளவர் சாதம் தயார். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த உணவை உங்களது குழந்தைக்கும் செய்து கொடுக்கலாமே?...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |