பத்தே நிமிடத்தில் காலிஃப்ளவர் சுக்கா! சைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசிக்கலாம்

Tomato Cauliflower Onion Healthy Food Recipes
By Dhushi Nov 28, 2022 07:15 AM GMT
Report

பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது.

இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம்.

இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் சுக்கா எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் – 1

தக்காளி – 3

வெங்காயம் – 2

இஞ்சி பூண்டு விழுது – 2தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1தேக்கரண்டி

தனியா தூள் – 2தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

கரம்மசாலா தூள் – அரை தேக்கரண்டி

கொத்தமல்லி, புதினா – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

பத்தே நிமிடத்தில் காலிஃப்ளவர் சுக்கா! சைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசிக்கலாம் | How To Make Cauliflower Chukka In Tamil

தாளிப்புக்கு தேவையானப் பொருட்கள்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

பெருஞ்சீரகம் – 1 தேக்க்கரண்டி

கறிவேப்பிலை – கைப்பிடி

பத்தே நிமிடத்தில் காலிஃப்ளவர் சுக்கா! சைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசிக்கலாம் | How To Make Cauliflower Chukka In Tamil

தயாரிப்பு முறை

முதலில் காலிஃப்ளவரில் தேவையற்றப் பொருட்களை அகற்றிவிட்டு அதில் உப்பு மஞ்சள் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் காலிஃப்ளவரிலுள்ள கண்ணுக்கு தெரியாத புழுக்கள் அழிவடைகிறது, இதன் பின்னர் சுக்காவிற்கு தேவையான பொருட்களை தயார் செய்ய வேண்டும்.

அதாவது கொத்தமல்லி, புதினா,வெங்காயம் போன்றவற்றை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

தொடர்ந்து தக்காளியையும் எடுத்து நன்றாக வேக வைத்து தோல் நீக்கிய பின்னர் விழுதுப் போல் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் தாளிப்புக்கு தேவையான பொருட்களை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்க விட வேண்டும். சிறிது நேரத்திற்கு பிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.

இவையனைத்தும் வதங்கிய பின்னர் மூக்கை துளைக்கும் வாசம் வரும் அப்போது அதில் தக்காளிப்பழ விழுது, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு போன்ற பொருட்களை சேர்த்து மிளகாய்த்துாள் கருமையாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

சேர்க்கப்பட்ட மாசாலாவின் பச்சை வாசனை போனதும் காலிஃப்ளவரை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.

காலிஃப்ளவர் சாப்பிடக்கூடியளவு வந்ததும் மிளகுத்தூள், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை மேலளவில் தூவி விட்டு இறக்கினால் காலிஃப்ளவர் சுக்கா தயார்..! 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US