உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் கேரட் துவையல்- 10 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?
கேரட் ஆனது பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறியில் ஒன்று. இதை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதையே பலரும் விரும்புவார்கள்.
கேரட்டில் கேரட் பச்சடி, கேரட் தோசை, கேரட் இல்லாத உணவுகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து சமையலிலும் கேரட் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
அந்த வகையில், சுவையான கேரட் துவையல் ருசியாக செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்....
தேவையான பொருட்கள்
கேரட் - 1 கப் ( துருவியது )
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
புளி - பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
செய்முறை விளக்கம்
முதலில், கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
அதனுடன் கேரட் துருவலை சேர்த்துக்கு வதக்கி கொள்ளவும். இஞ்சி, புளி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வதக்கி கொள்ளவும்.
வதக்கிய கேரட் கலவை நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இப்போது சுவையான கேரட் துவையல் தயார்.