மாலை நேரத்தில் மொறு மொறுப்பான கேரட் சிப்ஸ் - செய்வது எப்படி?
சுவையான கேரட் சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 2 சில்லி ஃபிளேக்ஸ் - 1 ஸ்பூன் மிளகு - 1/4 ஸ்பூன் வெஜிடெபிள் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் ஓரிகனோ - 1 ஸ்பூன் சாட் மசாலா - 1/2 ஸ்பூன் பூண்டு பொடி - 1 ஸ்பூன் உப்பு - தே.அ

செய்முறை விளக்கம்
முதலில் கேரட்டை நன்கு கழுவி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள். பின் அவற்றை மெல்லிய ஸ்ட்ரிப் போல் நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். ஈரப்பதம் இருக்கக் கூடாது.

அதில் ஓரிகனோ, சாட் மசாலா, சில்லி ஃபிளேக்ஸ், மிளகு , பூண்டு பொடி உப்பு , 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு குளுக்கி கலக்கிக்கொள்ளுங்கள்.
பின் அவற்றை எடுத்து மயோனைஸ், சாஸ் அல்லது புதினா சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
இப்போது அவற்றை பேக்கிங் டிரேயில் அடுக்கி வைத்து 180 டிகிரியில் 15-20 நிமிடங்கள் நேரம் வைத்து பேக் செய்யுங்கள்.