Capsicum Chutney: ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தால் போதும்... அருமையான சட்னி தயார்
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ப குடைமிளகாயில் சட்னி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி மற்றும் தோசை என்றால் அதற்கு சட்னி, சாம்பார் கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் தற்போது பல வகைகளில் சட்னி வைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
இந்நிலையில் குடைமிளகாயில் சட்னி செய்வதைக் குறித்து பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
குடைமிளகாய் - 1
பூண்டு - 2 பல்
புளி - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
முதலில் வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து வேர்க்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கிவிட்டு, தொடர்ந்து சிறிய துண்டு புளி, சுவைக்கு ஏற்ப உப்பு, கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கவும்.
வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொண்டு, பின்பு வதக்கிய பொருட்களை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
கடைசியாக வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் கலக்கவும். தற்போது சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |