வீட்டிலேயே சுடசுட பரோட்டா செய்வது எப்படி?
வழக்கமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என எல்லோரும் விரும்பி உண்ணும் பரோட்டா அதிகமான மக்கள் வீட்டில் செய்வதில்லை.
கடைகளில் அதிகமான விலைப்போகும் பரோட்டாக்களை நீங்கள் வீட்டிலும் செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று நாங்கள் உங்களுக்கு தரப்போகும் ரெசிபி வீட்டில் மிருதுவான பரோட்டா செய்வதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 250 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - ஒரு கப்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் மாவை போட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து நன்றாக இழுத்து இழுத்து பிசைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பரோட்டா செய்யும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.
இவ்வாறு இழுத்து பிசைந்ததற்கு பின்னர் ஒரு ஸ்பூன் அளவில் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும். பின்னர் அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் அதை உருண்டைகளாக எடுத்து ஒரு தட்டையான பாத்திரத்தில் வைத்து மெல்லியதாக தட்டையாக்கவும்.
இவ்வாறு தட்டையாகியதும் ஒரு கத்தியை வைத்து நேரான கோடுகளை போன்று வெட்டி விடவும்.
பின்னர் அதை மேலும் கீழுமாக இழுத்து சுற்றி வைக்கவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இளம் சூட்டில் சுற்றி வைத்த உருண்டைகளை கொஞசம் தட்டையாக்கி சுட வேண்டும்.
அது நன்றாக பொன்நிறத்தில் வேக வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து எடுத்தால் கடையில் வாங்கிய பரோட்டா மாதிரியே இருக்கும்.