நடிகை தேவயாணி செய்த அவல் உப்புமா தெரியுமா? வெறும் 5 நிமிடம் போதுமாம்
காலை நேரத்தில் மிகவும் சுலபமான உணவாக அவல் உப்புமா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை உணவு என்பது மிக மிக முக்கியமாகும். நாம் புதிதாக தொடங்கும் நாளை மிகவும் சுறுசுறுப்பாக சோர்வு இல்லாமல் செயல்பட காலை உணவு முக்கியமாக உதவுகின்றது.
அதிலும் புரதச்சத்து கட்டாயம் இருக்கும்விதமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது தேவயாணி செய்யும் ஸ்டைலில் அவல் உப்புமா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சிகப்பு அவல் - 2 கப்
பச்சை மிளகாய் - 4(பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் அவலை ஒரு பவுலில் எடுத்து கழுவி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வத்தல், வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
தொடர்ந்து பச்சை மிளகாய், வெங்காயம் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு அவலை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இறுதியாக கொத்த மல்லி மற்றும் தேவை என்றால் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் அருமையான மற்றும் ஆரோக்கியமான அவல் உப்புமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |