வெறும் 5 நிமிடத்தில் தயாராகும் ஆப்பிள் சிப்ஸ்! ஈஸியா தயார் செய்யலாம்
பொதுவாக மாலை நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்லும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும்.
தினமும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும், அதன் ஆர்வம் குறைந்துவிடும். அந்த வகையில் ஆப்பிள் பழத்தில் சிப்ஸ் செய்வது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 2
பட்டைத்தூள் - ஒரு சிட்டிகை
பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்
செய்முறை
மைக்ரோ அவனை 120 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடங்கள் பிரி ட் செய்யவும்.
பின்பு ஆப்பளை நன்றாகக் கறுவி, மெல்லிய ஸ்லைஸ்களாக வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்ர் வைத்து, அதில் வட்ட வட்டமாக வெட்டிய ஆப்பிளைப் பரப்பவும்.
ட்ரேயை மைக்ரோ அவனில் வைத்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பேக் செய்து எடுத்து, ஆறவைத்த பின்பு பட்டைத்தூள், நாட் சர்க்கரை தூவி சாப்பிடவும்.