ஆரோக்கியத்தை மேன்படுத்தும் ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது?
கொத்தமல்லியை தனியா என்றும் அழைப்பார்கள்.த்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும் தான் உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. இது தவிர நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் நிறைந்து காணப்படுகின்றது.
இந்த கொத்தமல்லியில் சட்னி முதல் குழம்பு வரை அனைத்திலும் சேர்க்கப்படும். இந்த கொத்தமல்லியை வைத்து எப்படி ஆந்திரா பாணியில் தொக்கு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 2 கொத்தமல்லி கட்டு
- பெரிய சைஸ் புளி 15
- வற மிளகாய் சிறிதளவு
- வெல்லம் சிறிதளவு
- கடுகு சிறிதளவு
- வெந்தயம் தேவையான அளவு
- எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் கொத்தமல்லியை நன்கு கழுவி தனியே வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்கவும்.
இது வதங்கிய பின் எடுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 6 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சூடாகிய பின் அதில் காய்ந்த மிளகாயை போட்டு நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும். பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன், வெந்தயத்தை போட்டு வறுக்கவும்.
நன்கு வறுத்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தில் இருக்கும் காய்ந்த மிளகாயை மட்டும் எடுத்து வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
பாத்திரத்தில் இருக்கும் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய்யின் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
இப்போது வதக்கிய அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை அப்படியே ஒரு மிக்ஸிக்கு மாற்றி அதனுடன் ஊற வைத்திருக்கும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை விட்டு விட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
பின்பு அதில் வெல்லத்தை எடுத்து அதை தட்டி போட்டு மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் அதில் கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். இப்படி செய்து எடுத்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு தயார் .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |