ஹோட்டல் ஸ்டைலில் பிரியாணி செய்யனுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
சுவையான அஞ்சப்பர் ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வெஜ் பிரியாணி
பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவு என்னவெனில் பிரியாணி ஆகும். பிரியாணிக்கு பொரித்த சிக்கன், தயிர் வெங்காயம் என பல வகைகளில் வைத்து சாப்பிடுவார்கள்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிரியாணி, பல வகைகளில் செய்யப்படுகின்றது. சிக்கன், மட்டன், மீன், இரால், நாட்க்கோழி, வான்கோழி என பல வகைகள் உள்ளது.

தற்போதைய மக்களின் அதிக விருப்பமாக நள்ளிரவு நேரத்தில் வெளியே சென்று பிரியாணி சாப்பிடுவதை புது பழக்கமாக கொண்டுள்ளனர்.
இவற்றினை ஒரு பொழுதுபோக்காகவும், இவ்வாறு சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் மற்றவர்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.
அந்த வகையில் சுவையான அஞச்ப்பர் ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப் -
உருளைக்கிழங்கு - 3
பச்சை பட்டாணி - அரை கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப் -
நெய் - 2 ஸ்பூன் (அரிசியை வறுக்க)
தாளிக்க: -
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1

அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
அலங்கரிக்க:
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் நாம் வாங்கிட்டு வந்த பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் 20 முதல் 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின் தேவையான வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உருளை கிழங்கு அனைத்தையும் நறுக்கி வைக்க வேண்டும். பின் நாம் அரைப்பதற்கான கூறிய பொருள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் நாம் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்பொழுது நாம் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அது நன்கு வதங்கிய பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்பொழுது நாம் நறுக்கி வைத்த உருளைக் கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்து சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பின் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அது நன்கு கொதித்தவுடன் நாம் ஊற வைத்த அரிசியை சேர்த்து 3 விசில் வைத்து விசில் போனதும் சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சுவையான அஞசப்பர் ஸ்டைல் பிரியாணி ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |