வேர்க்கடலை பெப்பர் சுக்கா - வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது?
மழை நேரத்தில் காரசாரமாகவும், சத்தானதாகவும் சாப்பிட அடிக்கடி ஆசை வரும். இதற்கு வீட்டில் வேர்க்கடலை இருந்தால், அதைக் வைத்து சுவையான பெப்பர் சுக்கா செய்யலாம்.
இந்த சுக்கா சுலபமாக தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையாக இருக்கும். முக்கியமாக, இதன் சுவை மட்டன் சுக்கா போல இருக்கும்.
சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வேர்க்கடலை பெப்பர் சுக்கா செய்வது எப்படி என்பதை கீழே உள்ள எளிய செய்முறை மூலம் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: வறுத்து அரைப்பதற்கு
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- பட்டை - 3 இன்ச்
- அன்னாசிப்பூ - 1
- கல்பாசி - 1
- மராட்டி மொக்கு - 1
- மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

கிரேவிக்கு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- வேக வைத்த வேர்க்கடலை - 1 கப்
- தண்ணீர் - 1 டம்ளர்
- கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, மராட்டி மொக்கு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
அதன் பின் அதில் மல்லி, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒருமுறை கிளறி, வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறி, மூடி வைத்து நன்கு நீர் சுண்ட கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வேர்க்கடலை பெப்பர் சுக்கா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |