Madurai Thani Chutney: மதுரை தண்ணி சட்னி செய்வது எப்படி?
பொதுவாக அநேகமான வீடுகளில் காலையுணவாக இட்லி அல்லது தோசை செய்வார்கள்.
இதற்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி, சாம்பார் செய்வார்கள். தினமும் ஒரே சட்னி செய்தால் “இது என்ன சாப்பாடு?” என சலித்து போய்விடும்.
அந்த வகையில் இட்லிக்கு சூப்பரான சைடிஷ்ஷாக “மதுரை தண்ணி சட்னி” பார்க்கப்படுகின்றது. இது மற்ற சட்னிகள் போல் அல்லாமல் விரைவாக செய்து முடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சட்னியை விரும்பி உண்பார்கள்.
இந்த சட்னியை பார்ப்பதற்கு தேங்காய் சட்னி போல் இருந்தாலும் செய்வதற்கு தேங்காய் தேவையில்லை. மதுரை ரோட்டுக்கடைகளில் இந்த சட்னியை தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், மதுரை தண்ணி சட்னி செய்வது எப்படி? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 3
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1 (விதைகளை நீக்கியது)
மதுரை தண்ணி சட்னி செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாகும் போது அடுப்பை அனைத்து விட்டு வதக்கிய பொருட்களுடன் பொட்டுக்கடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின்னர், அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வரமிளகாய், வெங்காயம் போட்டு தாளித்து இறக்கவும்.
இந்த ரெசிபியை சரியாக பின்பற்றினால் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |