வீட்டில் கரும்பு இருக்கா? அப்போ இப்படி கொழுக்கட்டை செய்து கொடுங்க
வீட்டில் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு நிறையவே இருக்கும். அதை எல்லாம் எவ்வளவு தான் சாப்பிட முடியும் என நினைத்து சிலர் வீசவு செய்வார்கள்.
அப்படியானவர்கள்களுக்கு ஒரு சிறந்த ரெசிபி பதிவில் பார்க்கலாம். இது தான் கரும்புச்சாறு கொழுக்கட்டை.
இது மிகவும் சத்தானது. இது கோதுமை மாவுடன் சேர்த்து கலந்து செய்வார்கள். இதை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கரும்பு - 3 (3/4 அடி நீளமுள்ள துண்டு)
- தண்ணீர் - 300 மிலி
- கோதுமை மாவு - 2 கப்
- உப்பு - 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை - 1/4 கப்
- தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
- நெய் - தேவையான அளவு.

செய்முறை
கொழுக்கட்டை செய்ய முதலில் கரும்பின் மேல் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் துண்டுகளாக்கப்பட்ட கரும்பை போட்டு, முதலில் ஒருமுறை அரைக்க வேண்டும்.
அதன் பின் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்ததை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை மாவை சேர்த்து 2 நிமிடம் வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
பின் அதில் கரும்பு சாற்றினை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கையில் நெய்யை தடவி, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, பிடிக்கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதனுள் இட்லி தட்டை வைத்து மூடி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கரும்புச்சாறு கோதுமை கொழுக்கட்டை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |