புற்றுநோய்க்கு மருந்தாகும் ஆட்டு குடல் குழம்பு- ஒருவாட்டி இப்படி செய்து பாருங்க
பொதுவாக வீடுகளில் ஞாயிற்றுகிழமைகளில் அசைவ உணவுகள் தான் அதிகமாக சமைப்பார்கள்.
வீடே மணக்கும் அளவில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான், அந்த நாள் முழுமையடையும்.
இந்த வாரம் ஸ்பெஷலாக என்ன செய்வதென்று சிலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படி நினைப்பவர்கள் மலச்சிக்கல், புற்றுநோய் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு நிவாரணம் கொடுக்கும் ஆட்டு குடல் குழம்பு செய்யலாம். காலையில் செய்யும் இட்லிக்கு செய்தாலும் சுவையாக இருக்கும்.
அந்த வகையில், மணமணக்கும் வகையில் ஆட்டு குடல் குழம்பை எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்குடல்
* இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பூண்டு - 7-8 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
குழம்பு செய்வது எப்படி?
முதலில் ஆட்டுக்குடலை நீரில் 2 எடுத்து இரண்டு தடவைகள் தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
குடல் வெந்தவுடன் வெளியே எடுத்துவிட்டு, அதில் உள்ள மேல் தோலை கத்தியால் சுரண்டி நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட குடலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து 4-5 விசில் விட்டு வேக வைக்கவும்.
இது ஒருபுறம் இருக்கையில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியவுடன் அதில் சீரகம், மிளகு சேர்த்து வறுத்து, மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து கொள்ளலாம். கடைசியாக வேக வைத்து வைத்திருக்கும் குடல், மசாலா, தேவையான அளவு நீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆட்டு குடல் குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |