வீட்டில் இரண்டு கத்தரிக்காய் இருக்கா? இப்படி கார குழம்பு செய்ங்க
வீட்டில் கத்தரிக்காய் மட்டும் தான் இருக்கு என்றால் அதை வைத்து எப்போதும் போல கறி சமைக்காமல் வித்தியாசமாக கார குழம்பு வைத்தால் மிச்சம் மீதி வைக்காமல் அப்படியே சாப்பிடுவார்கள்.
இந்த கார குழம்பு செய்ய முதலில் தேவை கழம்பு மசாலா தான். கத்தரிக்காய் பிடிக்காத சிலரும் இந்த கத்தரிக்காய் கார குழம்பு சாப்பிடுவார்கள்.
இந்த கத்தரிக்காய் கார குழம்ப எளிய செய்முறை தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து கத்தரிக்காய் கார குழம்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் நறுக்கியது)
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- குழம்பு மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
- புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
- தண்ணீர் - தேவையான அளவு
- வெல்லம் - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு
- தக்காளி - 2 (நறுக்கியது)
- பூண்டு - 4 பல்
- தேங்காய் - 1/4 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
குழம்பு மசாலாவிற்கு
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
- கடலை மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்
- வெந்தயத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் கத்திரிக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மசாலா ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, துருவிய தேங்காய், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்ததை வதங்கிக் கொண்டிருக்கும் கத்திரிக்காயுடன் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, வெல்லத்தை சேர்த்து கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால் கார குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |