சதை குறைய இந்த ஒரு விதை போதும்....வாழ்நாளில் தொப்பை எட்டிப்பார்க்காது?
வளர்ந்து வரும் நவீன் காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான்.
ஆனால் நிரந்தரமானது கிடையாது. உடல் எடையை ஆரோக்கியமாக குறைப்பது என்பது தான் கடினமான வேலை.
தற்போதைய நவீன சிகிச்கைகள், டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைத்தால் பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது.
அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்.
எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க பல வழிமுறைகளை தேடுபவர்களுக்கு சியா விதை ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும்.

சியா விதையில் கொழுப்பை குறைக்கும் சக்தி உள்ளது. இதனால் உடல் பருமனை கட்டுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.
நம்முடைய உடலுக்கு ஒமேகா-3 மிகவும் முக்கியமாகும். அத்தகைய ஒமேகா-3 அதிகமாக சால்மீனில் தான் இருக்கும் என நினைத்து கொண்டு இருப்போம்.
ஆனால் இந்த சால் மீனில் உள்ள ஒமேகா-3 அளவை விட சியா விதையில் 8 மடங்கு ஒமேகா-3 சத்து உள்ளது. எனவே இந்த விதையை உணவில் சேர்த்து கொண்டு ஆற்றலை பெற வேண்டும்.
நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, மற்றும் இரும்புசத்து குறைபாட்டிற்கு கால்சியம் அளவு குறைவாக இருப்பதே ஆகும்.
அத்தகைய கால்சியத்தின் அளவு பாலில் அதிகமாக இருக்கும். ஆனால் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட 6 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ளது மேலும் இதில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே நம்முடைய எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
கீரையில் இருக்கும் இரும்பு சத்துக்களை விட 3 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ளது.
இத்தகைய நன்மைகள் கொண்ட சியா விதையை உணவில் சேர்த்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு தானாகவே மாயமாகும்.
நீங்கள் இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைக்க விரும்பினால் கீழ்கண்ட இந்த எளிய முறையை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்
- சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
- கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
கூறப்பட்ட அளவுடைய சியா விதைகளையும் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் · அவையிரண்டும் சேர்ந்த கலவையை நன்கு கலக்கவும்.
இரண்டு மாதங்களுக்கு காலை உணவிற்கு பின்னர் இந்த கலவையை உட்கொள்ளுங்கள், இரண்டே மாதங்களில் கவர்ச்சியான தொப்பையில்லாத வயிற்று தோற்றத்தை பெறலாம்.
இந்த எளிய சமையலறை தயாரிப்பு உங்கள் தொப்பையை இரண்டே மாதங்களில் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, அனால் நீங்கள் இதை தொடர்ந்து உட்கொள்ளவேண்டும்.