கொலஸ்ட்ரால் நோய் வருவதற்கு இதுதான் காரணம்! இதை மட்டும் பண்ணாதீங்க
ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை அளித்தாலும், பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன.
அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை HDL கொழுப்பு என்று கூறப்படுகின்றது.
நாம் கொழுப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், தேவைப்படாத கொழுப்புகளான LDL கொழுப்புகள் ரத்த குழாயில் படியும் செயற்பாடு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும்.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் துவக்கத்திலிருந்தே இதற்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் பிரச்சனை தீவிரமாகி மாரடைப்பு போன்ற நிலைகளையும் ஏற்படுத்தும்.
கொலஸ்ரோல் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சில உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வெண்ணெய்
வெண்ணெய் நரம்புகளை அடைந்த பிறகு உறைந்து விடுவதால் இது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. நாம் உண்ணும் உணவுப்பட்டியலில் தினமும் வெண்ணெய் சேர்த்து கொள்கிறோம்.
தினமும் வெண்ணெய் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக அதிகரிக்க செய்கிறது. வெண்ணெயை தொடர்ந்து சாப்பிட்டால் கரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படலாம்.
ஐஸ்கிரீம்
100 கிராம் வெண்ணிலா ஐஸ்கிரீமில் சுமார் 41 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடாமல் எப்போதாவது சாப்பிடலாம்.
பிஸ்கட்ஸ்
ஆஸ்திரேலிய ஆய்வின்படி பிஸ்கட்கள் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டிருக்கும் ஒரு உணவாகும். தினமும் ஒன்றிரண்டு பிஸ்கட்களை சாப்பிடுவது அளவானது.
துரித உணவுகள்
பர்கர், பீட்சா. போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியமற்ற உணவு முறையாக கருதப்படுகிறது. வெண்ணெய், சீஸ் மற்றும் க்ரீம் போன்ற பல பொருட்கள் மேற்காணும் உணவுகளையும் தயாரிக்க அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இதை உண்பதால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு எளிதாக அதிகரிக்கிறது.
இந்த நோயினால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திடீரென எடை அதிகரிக்கும், வேலைகளை செய்யும் போது மூச்சுத்திணறல் ஏற்படும், கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படும், நெஞ்சு வலி ஏற்படுத்தும் இது போன்ற பிரச்சனை இருந்தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |