கீரைகளை கெட்டுப் போகாமல் பயன்படுத்த வேண்டுமா... உங்களுக்கான டிப்ஸ் இதோ
பொதுவாகவே ஆரோக்கியமான உணவுமுறையையும் உணவுப் பழக்க வழக்கத்தையும் தான் நாம் அதிகம் விரும்புகிறோம். அப்படி தான் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை, உடற்பயிற்சி என்பவற்றை பின்பற்றி வருகின்றோம்.
அந்தவகையில் நாம் தினமும் கீரை உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமானதொன்று அவ்வாறு கீரைகளை கடைகளில் வாங்கும் போது அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
அவ்வாறு வாங்கி வைக்கும் போது அவை நீண்ட நாட்களுக்கு புதிது போல இருக்காது. இரண்டு மூன்று நாட்களில் கருப்பாகி பழுதாகி விடும். அதிலும் வெயில் காலங்களில் வாங்கினால் சீக்கிரம் அழுகி போய்விடும். இந்தக் கீரைகளை வாங்கி பழுதாகாமல் வைத்திருக்க இலகுவான வழிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கீரையை பழுதாகாமல் சேமிக்க
குளிர்சாதன பெட்டியில் கீரையை சேமிக்கும் போது, காய்கறி டிராயரில் வைக்கவும்.
கீரையை மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து விலக்கி வைக்கவும்.
கீரையை சேமித்து வைப்பதற்கு முன்பு கழுவினால், முதலில் சாலட் ஸ்பின்னரைப் பயன்படுத்தி உலர்த்தி பின்னர் சேமித்து வைப்பது நல்லது.
கீரையை ஈரமான பையில் இருந்தால் பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும்.
கீரையை பிரஷ்ஷாக வைத்திருக்க கீரையின் தண்டுகளில் இருந்து இலைகளை துண்டு துண்டாக வெட்டி காற்று புகாத பையில் போட்டு ப்ரீஸரில் வைக்கவும்.
கீரையை காற்றுப்புகாத பாத்திரத்தில் வைப்பதற்கு முன் கீரையை கழுவாமல் ஒரு மெல்லிய துணி கொண்டு துடைப்பது வைப்பது நல்லது.
கீரைக்கட்டுகளை வாங்கியவுடன் தேவையில்லாத இலைகளை எல்லாம் அகற்றிவிட்டு செய்தித் தாள் கொண்டு கீரைகளை சுற்றி வைத்தால் பழுதாகாமல் இருக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |